குழப்பங்களின் கதவு - ஹசரத் உமர் (ரலி)
நபி (ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு!
இன்றைய உலகில் எமது சுன்னத் வல் ஜமா அத் முஸ்லிம்கள் சின்னா பின்னப் பட்டு சிதறிப் போய் இருக்கிறார்கள்.
எமக்கு என்று ஒரு தலைமைத்துவம் இல்லை.
தலைமைத் துவத்தை சொல்லித் தருகின்ற உலமாக்களிடம் ஒற்றுமை இல்லை.
அவர்கள் தொலைத்து விட்ட ஒற்றுமைக்கு சாக்கு போக்காக கருத்து வேற்றுமையில் சிக்கி இருக்கின்ற ; தனித்துவமாக தம்மை நிலை நிறுத்திய உலமாக்கள் ஒரு புறமும், முரண் பட்ட கருத்துக்கள் சமுகத்தின் அருள். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை என்று குழுவாக இன்னொரு பிரிவினரும் எமது சமுகத்தை சிதைத்துக் கொண்டு இருக்கும் குழப்பமான கொடுமை எமது ஜமாத்தில் தான் இருக்கிறது.
இந்தக் கொடுமைகளின் அடித் தளம் எது என்று கவனித்துப் பார்த்தால், இந்தக் குழப்பங்களின் வாசல் என்று உமர் (ரலி) அவர்களை குறிப்பிடும் பல ஹதீத்கள் புகாரி ஹதீத் கிரந்தத்தில் மிக ஆச்சரியமாக இப்படி பதிவு செய்யப் பட்டுள்ளன.
இந்த ஹதீத்களை அறிவிப்பவர் ஹஸ்ரத் ஹுதைபா யமானி (ரலி) அவர்களாவார்கள்.
ஹஸ்ரத் ஹுதைபா யமானி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அந்தரங்க செயலாளராக கருதப் படும் அளவுக்கு முக்கியமனவராவர். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களின் இடையே இருந்த முனாபிகீன்களின் பட்டியல் ஒன்றை இவர்
வசம் தான் கொடுத்து வைத்திருந்தார்கள்.
ஹஸ்ரத் ஹுதைபா (ரலி) கூறியதாவது:
நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்து இருந்தபோது "நபி (ஸல்) அவர்கள் குழப்பங்களைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்து இருப்பவர் யார்?" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்து இருக்கிறேன் என்றேன்.
அதற்கு உமர் (ரலி) "நீர் அதற்கு தகுதியானவர் தாம்" என்றனர்.
"ஒரு மனிதன் தமது குடும்பத்தவரிடமும், தமது சொத்துக்களிலும், தமது குழந்தைகளிடமும், தமது அண்டை வீட்டாரிடமும் குழப்பங்களில் ஆழ்த்தப் படும் போது
தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை விலக்குதல் ஆகிய காரியங்கள் அந்த குழப்பங்களுக்கு பரிகாரமாகும்" என்று நான் விடை அளித்தேன்.
அதற்கு "நான் இதைக் கருதவில்லை" என்ற உமர் (ரலி) அவர்கள் "கடல் அலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் குழப்பங்கள் பற்றியே கேட்கிறேன்" என்றார்கள்.
"முமினகளின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.உங்களுக்கும் அந்த குழப்பங்களுக்கும் இடையே மூடப்பட்ட கதவு உள்ளது" என்று நான் கூறினேன்.
"அந்தக் கதவு திறக்கப் படுமா? அல்லது, உடைக்கப் படுமா?" என்று உமர் (ரலி) கேட்டார்கள்.
நான்"உடைக்கப்படும்" என்றேன்.
"அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது" என உமர் (ரலி) கூறினார்கள்.
ஷகீக் கூறியதாவது "அந்தக் கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா?" என்று நாங்கள் ஹுதைபா (ரலி) இடம் கேட்டோம்.
"ஆம். பகலுக்குப் பின் இரவு என்பதை அறிவது போல் அந்தக் கதவை உமர் (ரலி) நன்கு அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்." என்று ஹுதைபா (ரலி) கூறினார்.
"அந்தக் கதவு எது?" எனக்கேட்க நாங்கள் அஞ்சி மஸ்ருக்கை கேட்கச் செய்தோம்.
அதற்கு ஹுதைபா (ரலி) அவர்கள்" எமது சமுகம் எதிர் கொள்கின்ற கடல் அலை போல் அடுக்கடுகாக வருகின்ற குழப்பங்களின் கதவு உமர் (ரலி) தான் " என்றார்கள்.
(ஆதாரம்; புகாரி பாகம் ஒன்று - ஹதீத் இலக்கம் 525;
புகாரி பாகம் இரண்டு - ஹதீத் இலக்கம் 1435
புகாரி பாகம் இரண்டு - ஹதீத் இலக்கம் 1895
புகாரி பாகம் நான்கு - ஹதீத் இலக்கம் 3586
இந்த ஹதீதை எமது உலமாக்கள் எம்மிடம் விவரிக்கும் பொழுது எம்மை சிக்கலில் ஆழ்த்த காத்திருக்கும் குழப்பங்களின் மூடிய கதவாக உமர் (ரலி) இருப்பதாக சிலேகித்து பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.
அது சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அத்தகைய கருத்துக் கொண்டுள்ள உலமாகளிடம் எமது கேள்விகள் இவை தான்.
1 .ஹுதைபா யமானி (ரலி) அவர்கள் நேரிடையாகவே எமது உலமாக்களின் கருத்தை குறிப்பிடுவதில் தவறு இல்லையே? எதற்காக அவர் நேரிடையாக எதுவும் குறிப்பிட வில்லை?
2 .எதற்காக ஷகீக் ஹுதைபா (ரலி) அவர்களிடம் அந்தக் கதவைப் பற்றிக் கேட்க அச்சம் கொண்டார்?
3 .இமாம் புகாரி இந்த ஹதீத்களுக்கு கொடுத்திருக்கும் தலைப்புகளை . கவனித்தால், அவருடைய காலத்தில் கூட பகிரங்கமாக இந்த ஹதீதை அறிவிக்க முடியாத நிலைமை இருந்து இருப்பது புலனாகின்றது:
முதலாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 525"தொழுகை பாவங்களின் பரிகாரம்"
இரண்டாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 1435 "தர்மம் பாவங்களை அழித்து விடும்" .
மூன்றாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 1895 "நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரம்" நான்காவது தலைப்பு ஹதீத் இலக்கம் 3571 "இஸ்லாத்தில் நபித்துவத்தின் அடையாளம்"
நான்கவது தலைப்பைத் தவிர ஏனையவைகள் இந்த ஹதீதுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லை என்பதையும் கவனிக்கவும்.
நபி (ஸல்) அவர்களின் இறுதி மரண சாசனத்தை எழுதுவதை தடுப்பதில் உமர் (ரலி) தலைமை தாங்கி இருந்திருக்கும் செய்தி நாம் அறிந்த நிஜங்களில் ஒன்று.
ஹசரத் உமர் (ரலி) சொன்னது போல நபி (ஸல்) முன் அறிவித்த குழப்பங்களின் கதவு அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு உமர் (ரலி) தனது எதிப்பை பகிரங்கமாக தெரிவித்த கணத்தில் இருந்து திறந்து வைக்கப் பட்டது.
இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டது போல நபி (ஸல்) அவர்களது இறுதி மரண சாசனம் எழுதுவதற்கு தடுக்கப் பட்ட செய்கை அரங்கேறிய நாள் தான் எமது சமுகம் தற்பொழுது சிக்கித் தத்தளிக்கும் குழப்பங்களின் கதவு திறக்கப் பட்ட சோதனையான நாளாகும்.
குழப்பங்களுக்கு காரணம் :
- தான் மட்டும் வாழனும் (அதோடு தன் குடும்பம்)
- தவ்ஹிது என்ற பெயரில் தான் ஒரு லெட்டர் பேட் சங்கத்தை ஆரம்பித்து தான் சம்பாரிப்பதை மற்றவர்கள் தடுக்காமல் பாதுகாத்துகொள்வது.
- நான் தலைவர் இல்லை என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக லெட்டர் பேட் சங்கத்தை இயக்குவது.
- ஊருக்கு ஊர் கூட்டம் கூட்டுவது. அதோடு அந்த இயக்கத்தில் யாருக்காவது பெரிய கூட்டம் கூடிவிட்டால் அவரை லெட்டர் பேட் சங்கத்திலிருந்து நீக்குவது.
- ஊருக்கு ஊர் இஸ்லாம் பேர் போட்டு CD போட்டு விற்று அந்த காசை ஆதாயம் பார்பது
- தவ்ஹிது கூட்டம் என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக அரசியலுக்கு ஆதரவு தருவது.
இன்னும் எத்தனை எத்தனை ஆசைகள். அற்ப விஷயத்திற்காக.
அல்லாஹ் பாதுகாப்பவன்
No comments:
Post a Comment