Monday, March 28, 2011

இறையச்சமுடையவர்களாக.........

பரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல்என்னதான்  வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள்  வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான், அக்கடலின் அரசன் ஒருவன்  இருக்கிறான் என்றும், அவன்தான் ஆர்ப்பரித்து  வரும்  அலைகடலை அணைபோட்டு தடுத்து  வந்தவன் என்றும்,  அநீதிகள் பெருகும் போது தனது ஆற்றலை அவ்வப்போது மனிதனின் படிப்பினைக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறான் என்பதை  மனிதன் ஏனோ உணர மறுக்கிறான்.

கடல் காவு கொள்ளும் இந்த சுனாமி என்ற வார்த்தையே ஜப்பான் மொழியாகும். சிறிதாகவும், பெரிதாகவும் சுனாமியால் அதிகமாக அடிக்கடி தாக்கப்படும் நாடும் ஜப்பான்தான். இந்த சுனாமியிலிருந்து  தற்காத்துக் கொள்ள எண்ணற்ற முன்னேற்பாடுகளையும் ஜப்பான் செய்து வைத்திருந்தாலும், மார்ச் 11 அன்று ஜப்பானை கடுமையாக தாக்கிய சுனாமியால் உயிர்கள் பலி, உடமைகள்-வீடுகள் சேதம் என நிலைகுலைந்து நிற்கிறது ஜப்பான். இந்த  சுனாமி இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாகவே அவ்வப்போது  பல நாடுகளை பதம் பார்த்துள்ளது.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்

1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.

1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்

1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.

1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.

1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.

1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.

2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.

2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.[புள்ளி விவரங்கள் நன்றி; thirudan.com ]

இத்தகைய பேரழிவு சுனாமியை இஸ்லாமிய பார்வையில் சற்று அலசி பார்ப்போம்.

நபி நூஹ்[அலை] அவர்கள் தமது சமுதாயத்திடம் சத்தியத்தை சொன்னபோது, அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை  ஏற்க மறுத்ததோடுவரம்பு மீறியதன் காரணமாக, அந்த சமுதாயத்தில்  இஸ்லாத்தை ஏற்றவர்கள் நீங்கலாக, மற்றவர்கள்   அல்லாஹ்வால் அழிக்கப்பட்டார்கள்அந்தசமுதாயத்தை அழிப்பதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழிபூமியிலிருந்து அலைபோல நீரை பொங்க வைத்ததும்  வானிலிருந்து மழையை பொழிவித்ததுமாகும்இதுபற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்;