Sunday, January 30, 2011

குழப்பங்களின் கதவு ஹசரத் உமர் (ரலி)

குழப்பங்களின் கதவு - ஹசரத் உமர் (ரலி)

நபி (ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு!

இன்றைய உலகில் எமது சுன்னத் வல் ஜமா அத் முஸ்லிம்கள் சின்னா பின்னப் பட்டு சிதறிப் போய் இருக்கிறார்கள்.

எமக்கு என்று ஒரு தலைமைத்துவம் இல்லை.

தலைமைத் துவத்தை சொல்லித் தருகின்ற உலமாக்களிடம் ஒற்றுமை இல்லை.

அவர்கள் தொலைத்து விட்ட ஒற்றுமைக்கு சாக்கு போக்காக கருத்து வேற்றுமையில் சிக்கி இருக்கின்ற ; தனித்துவமாக தம்மை நிலை நிறுத்திய உலமாக்கள் ஒரு புறமும், முரண் பட்ட கருத்துக்கள் சமுகத்தின் அருள். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை என்று குழுவாக இன்னொரு பிரிவினரும் எமது சமுகத்தை சிதைத்துக் கொண்டு இருக்கும் குழப்பமான கொடுமை எமது ஜமாத்தில் தான் இருக்கிறது.

இந்தக் கொடுமைகளின் அடித் தளம் எது என்று கவனித்துப் பார்த்தால், இந்தக் குழப்பங்களின் வாசல் என்று உமர் (ரலி) அவர்களை குறிப்பிடும் பல ஹதீத்கள் புகாரி ஹதீத் கிரந்தத்தில் மிக ஆச்சரியமாக இப்படி பதிவு செய்யப் பட்டுள்ளன.

இந்த ஹதீத்களை அறிவிப்பவர் ஹஸ்ரத் ஹுதைபா யமானி (ரலி) அவர்களாவார்கள்.

ஹஸ்ரத் ஹுதைபா யமானி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அந்தரங்க செயலாளராக கருதப் படும் அளவுக்கு முக்கியமனவராவர். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களின் இடையே இருந்த முனாபிகீன்களின் பட்டியல் ஒன்றை இவர்
வசம் தான் கொடுத்து வைத்திருந்தார்கள்.

ஹஸ்ரத் ஹுதைபா (ரலி) கூறியதாவது:

நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்து இருந்தபோது "நபி (ஸல்) அவர்கள் குழப்பங்களைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்து இருப்பவர் யார்?" என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்து இருக்கிறேன் என்றேன்.

அதற்கு உமர் (ரலி) "நீர் அதற்கு தகுதியானவர் தாம்" என்றனர்.

"ஒரு மனிதன் தமது குடும்பத்தவரிடமும், தமது சொத்துக்களிலும், தமது குழந்தைகளிடமும், தமது அண்டை வீட்டாரிடமும் குழப்பங்களில் ஆழ்த்தப் படும் போது
தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை விலக்குதல் ஆகிய காரியங்கள் அந்த குழப்பங்களுக்கு பரிகாரமாகும்" என்று நான் விடை அளித்தேன்.

அதற்கு "நான் இதைக் கருதவில்லை" என்ற உமர் (ரலி) அவர்கள் "கடல் அலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் குழப்பங்கள் பற்றியே கேட்கிறேன்" என்றார்கள்.

"முமினகளின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.உங்களுக்கும் அந்த குழப்பங்களுக்கும் இடையே மூடப்பட்ட கதவு உள்ளது" என்று நான் கூறினேன்.

"அந்தக் கதவு திறக்கப் படுமா? அல்லது, உடைக்கப் படுமா?" என்று உமர் (ரலி) கேட்டார்கள்.

நான்"உடைக்கப்படும்" என்றேன்.

"அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது" என உமர் (ரலி) கூறினார்கள்.

ஷகீக் கூறியதாவது "அந்தக் கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா?" என்று நாங்கள் ஹுதைபா (ரலி) இடம் கேட்டோம்.

"ஆம். பகலுக்குப் பின் இரவு என்பதை அறிவது போல் அந்தக் கதவை உமர் (ரலி) நன்கு அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்." என்று ஹுதைபா (ரலி) கூறினார்.

"அந்தக் கதவு எது?" எனக்கேட்க நாங்கள் அஞ்சி மஸ்ருக்கை கேட்கச் செய்தோம்.

அதற்கு ஹுதைபா (ரலி) அவர்கள்" எமது சமுகம் எதிர் கொள்கின்ற கடல் அலை போல் அடுக்கடுகாக வருகின்ற குழப்பங்களின் கதவு உமர் (ரலி) தான் " என்றார்கள்.

(ஆதாரம்; புகாரி பாகம் ஒன்று - ஹதீத் இலக்கம் 525;
புகாரி பாகம் இரண்டு - ஹதீத் இலக்கம் 1435
புகாரி பாகம் இரண்டு - ஹதீத் இலக்கம் 1895
புகாரி பாகம் நான்கு - ஹதீத் இலக்கம் 3586

இந்த ஹதீதை எமது உலமாக்கள் எம்மிடம் விவரிக்கும் பொழுது எம்மை சிக்கலில் ஆழ்த்த காத்திருக்கும் குழப்பங்களின் மூடிய கதவாக உமர் (ரலி) இருப்பதாக சிலேகித்து பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.

அது சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அத்தகைய கருத்துக் கொண்டுள்ள உலமாகளிடம் எமது கேள்விகள் இவை தான்.

1 .ஹுதைபா யமானி (ரலி) அவர்கள் நேரிடையாகவே எமது உலமாக்களின் கருத்தை குறிப்பிடுவதில் தவறு இல்லையே? எதற்காக அவர் நேரிடையாக எதுவும் குறிப்பிட வில்லை?

2 .எதற்காக ஷகீக் ஹுதைபா (ரலி) அவர்களிடம் அந்தக் கதவைப் பற்றிக் கேட்க அச்சம் கொண்டார்?

3 .இமாம் புகாரி இந்த ஹதீத்களுக்கு கொடுத்திருக்கும் தலைப்புகளை . கவனித்தால், அவருடைய காலத்தில் கூட பகிரங்கமாக இந்த ஹதீதை அறிவிக்க முடியாத நிலைமை இருந்து இருப்பது புலனாகின்றது:

முதலாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 525"தொழுகை பாவங்களின் பரிகாரம்"
இரண்டாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 1435 "தர்மம் பாவங்களை அழித்து விடும்" .
மூன்றாவது தலைப்பு ஹதீத் இலக்கம் 1895 "நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரம்" நான்காவது தலைப்பு ஹதீத் இலக்கம் 3571 "இஸ்லாத்தில் நபித்துவத்தின் அடையாளம்"

நான்கவது தலைப்பைத் தவிர ஏனையவைகள் இந்த ஹதீதுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லை என்பதையும் கவனிக்கவும்.

நபி (ஸல்) அவர்களின் இறுதி மரண சாசனத்தை எழுதுவதை தடுப்பதில் உமர் (ரலி) தலைமை தாங்கி இருந்திருக்கும் செய்தி நாம் அறிந்த நிஜங்களில் ஒன்று.

ஹசரத் உமர் (ரலி) சொன்னது போல நபி (ஸல்) முன் அறிவித்த குழப்பங்களின் கதவு அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு உமர் (ரலி) தனது எதிப்பை பகிரங்கமாக தெரிவித்த கணத்தில் இருந்து திறந்து வைக்கப் பட்டது.
இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டது போல நபி (ஸல்) அவர்களது இறுதி மரண சாசனம் எழுதுவதற்கு தடுக்கப் பட்ட செய்கை அரங்கேறிய நாள் தான் எமது சமுகம் தற்பொழுது சிக்கித் தத்தளிக்கும் குழப்பங்களின் கதவு திறக்கப் பட்ட சோதனையான நாளாகும்.
 குழப்பங்களுக்கு காரணம் :
-  தான் மட்டும் வாழனும் (அதோடு தன் குடும்பம்)
-  தவ்ஹிது என்ற பெயரில் தான் ஒரு லெட்டர் பேட் சங்கத்தை ஆரம்பித்து தான் சம்பாரிப்பதை மற்றவர்கள் தடுக்காமல் பாதுகாத்துகொள்வது.
- நான் தலைவர் இல்லை என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக லெட்டர் பேட் சங்கத்தை இயக்குவது.
- ஊருக்கு ஊர்  கூட்டம் கூட்டுவது. அதோடு அந்த இயக்கத்தில் யாருக்காவது பெரிய  கூட்டம் கூடிவிட்டால் அவரை லெட்டர் பேட் சங்கத்திலிருந்து நீக்குவது.
ஊருக்கு ஊர் இஸ்லாம் பேர் போட்டு CD போட்டு விற்று அந்த காசை ஆதாயம் பார்பது
- தவ்ஹிது கூட்டம் என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக அரசியலுக்கு ஆதரவு தருவது.
இன்னும் எத்தனை எத்தனை ஆசைகள். அற்ப விஷயத்திற்காக.

அல்லாஹ் பாதுகாப்பவன்





Tuesday, January 25, 2011

சீட்டுக்காக அலையும் முஸ்லிம் சில்லறை வியாபாரிகள்....

அல்லாஹு அக்பர் . முஸ்லிம்களில் தான் எத்தனை எத்தனை எத்தர்கள். பதவி ஆசை பிடித்து அலையும் இவங்களுக்கு ஆண்டவன் தான் நல்ல புத்தியை கொடுக்கணும். சமுதாய ஆசை இருக்கு வேண்டும்தான் இதற்காக எத்தனை எத்தனை பொய்கள் மற்றும் புறம் பேசுதல். நல்லா வளர்ந்த இயக்கத்தை மோடி வர்கத்திடம் அடமானம் வைக்கும்

Wednesday, January 19, 2011

முசல்லாவுக்கு வந்த சோதனை.... ?

                                
 நண்பர்  ஹாஜாஷரிப் அவர்களுக்கு உள்ள தைரியம் நம் எல்லோருக்கும் வர இன்ஷா அல்லாஹ் உதவி புரிவானாக..

இந்த தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல் ) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டை கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்....

Tuesday, January 18, 2011

ஸலாம் கூறுவதால் என்ன பயன்?

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முஸ்லிம் பதிவர்கள் மற்றும் பின்னூட்டமிடும் முஸ்லிம்களை மனதில் கொண்டு எழுதப்படும் பதிவு.

தமிழ் பதிவுலகில் பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் அழகான முறையில் செயலாற்றி வருகின்றார்கள். இஸ்லாம் குறித்த தகவல்கள், சமூக பிரச்சனைகள், உலக நடப்புகள், தொழில்நுட்பம் என்று அருமையாக எழுதி வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம் பதிவர்களில் ஒரு பகுதியினர் நான் இங்கு சொல்லப்போகும் விஷயத்தை ஏற்கனவே செயல்படுத்தி தான் வருகின்றார்கள். அவர்கள் மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

Saturday, January 15, 2011

சொந்த மண்ணையே இழந்து அகதிகளாக அரேபியர்கள்.

 
றுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள் நடத்தும் போரில் சொந்த மண்ணையே இழந்து அகதிகளாக அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் அரேபியர்கள்.
 

இஸ்ரேல் ராணுவம் காசாவின் மீது தினம் பொழியும் குண்டு மழையில் சிதைந்து போன முகத்தோடு ரத்தம் வழிய சின்னஞ்சிறுசுகள் தொலைக்காட்சிகளில் அலறுவதைக் கேட்கவே அடிவயிறு பதறுகிறது. அந்தக் கொலை பூமியில் ஒரு அமைதிப் புறா பறக்காதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்!யாசர் அராஃபத்தின் வருகைக்குப் பின்பு புது தெம்பு பெற்ற பாலஸ்தீனியர்கள் அவரது மறைவுக்குப் பிறகு இருட்டில் தள்ளப்பட்டுத் தவிக்கிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் அன்றாடம் படும் கொடுமைகளை உலக அரங்கத்தின் மனசாட்சிக்கு முன்னால் நிறுத்தி நீதி கேட்க ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் ஒரு தரை வழிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து என்று முன்னேறிச் செல்கிறது இந்தப் பயணக்குழு. இதில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன். அவரது பயணம் எப்படி இருக்கிறது? சிரியாவின் துறைமுக நகரமான லதாக்கியாவில் இருந்தவரிடம் பேசினோம்.

‘‘இதுவரை எட்டாயிரம் கிலோ மீட்டரை சாலை வழியாகவே கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசம், விதவிதமான மக்கள், முற்றிலும் பழக்கமே இல்லாத புது உணவு, இப்படி உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறது பயணம்’’ என்றவர், தொடர்ந்தார்...

‘‘ஆசிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் திரட்டிய நிதியின் மொத்தத் தொகை 1 மில்லியன் டாலர். இதில் பாதிப் பணத்தை இந்தியாவில் இருந்து திரட்டி இருக்கிறோம் என்பதே பெருமிதம்தான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் கூட்டங்கள் பேசுகிறோம். குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொள்வதோடு தங்களால் முடிந்த நிதியையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். பிஞ்சுக்குழந்தைகள் கூட கூட்டத்தில் தொண்டை கிழிய டவுன் டு யு.எஸ்.ஏ. என்று முழக்கமிடும் காட்சி ரொம்பவும் உணர்ச்சிபூர்வமானது’’ என்றார்.

‘‘சிரியா உட்பட பல நாடுகளில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு இலங்கை அகதிகளைப் போல இல்லை.ரொம்பவும் மரியாதையாகவும் அரசு வேலைகளில் கௌரவமான உத்தியோகத்திலும் இருக்கிறார்கள்’’என்றவரிடம் உங்களை மனம் நெகிழச் செய்த சம்பவம் உண்டா? என்றோம்.
‘‘நேற்று ஹோட்டலில் எங்கள் குழுவைச் சந்தித்த பெண்மணி, தன்னுடைய தாத்தாவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை விட்டு அகதியாக துரத்தப்பட்ட சோகக் கதையைச் சொல்லி கண்ணீர் விட்டார். எங்கள் நாட்டை நாங்களே பார்க்க முடியவில்லை. உங்களுக்காவது அந்தப் பாக்கியம் வாய்த்திருக்கிறதே என்றார். பேசிக்கொண்டே இருந்தவர் தன் கைப் பையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை என் கையில் திணித்தார். நான் மறுத்தேன். இந்தப் பணம் உங்களுக்கு இல்லை. காசாவில் ஏதேனும் ஒரு கஷ்டப்படும் குடும்பத்திற்கு கொடுத்து விடுங்கள் என்றார்.’’ உணர்ச்சி பொங்க பேசுகிறார் முத்துகிருஷ்ணன்.


Thanks to Kumudham.

Thursday, January 13, 2011

செல்வங்களில் சிறந்தது மனைவியே

செல்வங்களில் சிறந்தது மனைவியே

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!யே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

''உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)


''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.

ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.

பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள்.

வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள்.

அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறியதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!


சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

அல்ஹம்துலில்லாஹ் நம் தமிழ்நாட்டில் எவ்வளவு இயக்கங்கள் இருந்தாலும் அவர்களுடைய வேலை மாநாடு அப்புறம் கூட்டம், நீ பெரியவனா இல்ல நான் பெரியவனா .....நம்ம பொம்பளைங்கள புள்ளைங்க பாருங்கப்பா. முதல்ல மத்த சமுதாயத்தில் இருந்து பார்குறவன் என்ன நெனைப்பான்.ஈகோ எங்கயும் ஜெயிச்சதா சரித்திரம் இல்லைடா என் சகோதர்களே.

அன்புடன் சிர்காழி சித்தப்பு

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?
மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.
கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான்,முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை "அபாயகரமான பகுதிகள்" (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.
நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். "ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை" என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள்.
கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!
தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.
சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன.
 நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47% மும், கர்நாடகாவில் 46.2% மும், மேற்கு வங்கத்தில் 17.44% மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.
முஸ்லீம் விரோதப்போக்கில் பி.ஜே.பி. க்கு கொஞ்சமும் சளைத்ததல்ல மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்
முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன.
மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

Monday, January 10, 2011

சாபம் விட்டு கதறிய ஊனமுற்ற தம்பதி

இன்று காலையில் தினமலர் பத்திரிகையில் பார்த்த செய்தி இது...



ராமநாதபுரம் : மூன்று ஆண்டுகளாக ரேஷன் கார்டு தராமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊனமுற்ற தம்பதி கதறி அழுதனர்.

ராமநாதபுரம் சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாந்தி. ஆதரவற்ற இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். மதம் மாறிய இவர்கள், தங்கள் பெயரை அப்துல் ரஹிம், ஷப்ராபானு என மாற்றி, ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் குடியேறினர். ரஹிம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.

இதுவரை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடர்ந்து தவழ்ந்து வந்து முறையிட்டனர். நேற்று குழந்தையுடன் வந்த தம்பதிக்கு, அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கொதித்த இருவரும், கதறி அழுதபடி, மனவேதனையுடன் அதிகாரிகளுக்கு சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவத்தைப் பார்த்து மனு அளிக்க வரிசையில் நின்றவர்கள் மனவேதனை அடைந்தனர்.

அப்துல் ரஹிம் கூறியதாவது: ஓட்டு போடுவதற்கு மட்டும் காரில் வைத்து ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர். ரேஷன் கார்டு கேட்டால் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கின்றனர். 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டு நாளில் ரேஷன் கார்டு தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை. இவ்வாறு அப்துல் ரஹிம் கூறினார்

கவர்ச்சி பாதி காவி பாதி

விஜயகாந்தின் அரசியல் : கவர்ச்சி பாதி காவி பாதி

கருப்புப் பணம் மீதி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவது போல, தமிழக மக்களுக்கு தன்னுடைய தமிழ் சினிமா வசனங்களை எல்லாம் இலவசமாக மேடையில் வாரி இறைக்கிறார், “”கருப்பு எம்.ஜி.ஆர்.”, “”புரட்சிக்கலைஞர்” விஜயகாந்த்.

எழுதித் தந்த வசனங்களை மனப்பாடம் செய்து சினிமாவைப் போல் “நடிப்பை’ பிழிந்து மேடைகளில் வெளுத்துக் கட்டுகிறார்; சிவந்த கண்கள், அனல் பறக்கும் வசனங்கள், துடிக்கும் உதடுகள் என்று அச்சு பிசகாமல் சினிமா கதாநாயகன் போலவே அரசியல் மேடைகளில் சீறுகிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.

“”மாத்தி மாத்தி ஓட்டுப் போடறீங்க, நீங்க ஓட்டுப் போடறவங்க என்ன பண்றாங்க? சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா? இல்லை, தங்களுடைய சுயலாபத்துக்காகவா? தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா? அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா? எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க. அரசியல் தெரியாதவர்கள், அரசியல் பக்கம் வராதவர்கள் ஜெயிச்சு எம்.பி.யாக, மந்திரியாக வருகிறார்கள். ஏன், தேர்தலில் ஜெயிக்காமலேயே மந்திரி ஆகியிருக்கிறார்கள்” என்று கனலைக் கக்குகிறார். “”நான் அரசியல் வேண்டாம்னு சொல்றவன் இல்லை. ஆனா வந்துட்டா, ஊழல் இல்லாத நல்ல ஆட்சியா கொடுக்கனும்” என்று மிரட்டுகிறார்.

மேலும், ஆண்டாண்டு காலமாய் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அரை நொடியில் தீர்வு சொல்கிறார். “”செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக வரமுடிந்தது. அவரது தொழிலைத் தாழ்வாகவோ, தன்னை தாழ்த்தப்பட்டவராகவோ அவர் நினைக்கலே; இப்போதும் நான் தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன்னு யாரும் சொல்லிக்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். மற்ற ஜாதிக்காரர்கள் எப்படித் தங்களை உயர்வாக நினைக்கிறாங்களோ, அதுபோலவே இவங்களும் தன்னை உயர்வாக நினைச்சுக்கனும்” என்கிறார். அதாவது, ஆதிக்க சாதியினரிடம் உதை வாங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழ் சினிமாவைப்போல அப்படியே கனவுக் காட்சிக்குத் தாவி, உதை கொடுத்தவரின் மகளுடன் “டூயட்’ பாடவேண்டும். பழிக்குப் பழி! சாதிய ஒடுக்குமுறைக்கு கருப்பு எம்.ஜி.ஆர். கூறும் அரசியல் தீர்வு இதுதான்!

அடுத்து, “”ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி ஆயுதத்தை எடுக்கப் போறீங்க?” என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு “”அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்(?) வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க(!)” என்கிறார். இவையெல்லாம் பழைய “டப்பிங்’ தெலுங்குப்பட வசனங்கள். “ரிவால்வர் ரீட்டா’, “கன் பைன் காஞ்சனா’ போன்ற பழைய கௌபாய் படங்களிலிருந்து “சுட்ட’ வசனங்களைத்தான் அரசியல் சந்தையில் புதிதாக கடைவிரிக்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.

இதில் கூத்து என்னவென்றால் இவ்வாறான “அதிரடி அரசியல் கருத்துக்களை’ப் பேசுவதால் “”நான் நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சுட்டேன்… சந்திச்சுக்கிட்டு இருக்கிறேன்” என்று தமிழர்களிடம், குறிப்பாக பெண்களிடம் “”பாவம் விஜயகாந்த்” என்ற அனுதாபத்தைத் தேடுகிறார்.

“”நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்” என்பது எம்.ஜி.ஆர். “பார்முலா’. இப்போது இதையே தனது அரசியல் சரக்காக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.

“”உரிய பொறுப்புகள் (முதல்வர் பதவி) வந்தால் நிஜ வாழ்க்கையிலும் “ரமணா’ அவதாரம் எடுப்பேன். இந்தக் காலகட்டத்துல எந்தெந்த மட்டத்துல என்னென்ன ஃபிராடு நடக்குதுனு மத்தவங்களவிட எனக்கு நல்லாவே தெரியும். (ஏனெனில் இவரே வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்யும் கருப்புப் பண பேர்வழிதானே!). அதை எப்படியெல்லாம் தடுக்கலாம்னு நிறையவே யோசிக்கிறேன். லஞ்சம் கொடுப்பவர்கள் இருந்தாதானே அதை வாங்குறவங்க பெருகுவாங்க் லஞ்சம் கொடுக்கிறதையே நிறுத்திட்டா… அதுதான் என்னுடைய பிளான்” என்று கூறி, எம்.ஜி.ஆர்.யிசம் போன்று இன்னொரு பாசிச கோமாளியிசம்தான் “”ரமணாயிசம்” என்று வாக்குமூலம் தருகிறார்.

தமிழ் சினிமாவில் வரும் ஆபாச சரவெடி சிரிப்புக் காட்சிகளை விஞ்சும் கருப்பு எம்.ஜி.ஆரின் ரமணாயிசம் “ஒரிஜினல்’ எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தை விட அருவருப்பானது! ஆபத்தானது! கருவிலேயே அழிக்க வேண்டியது! இதற்கான ஆதாரங்களை எங்கேயும் தேடவேண்டியதில்லை. விஜயகாந்தின் பணவெறி, பதவிவெறி, சாதிவெறி, மதவெறி மற்றும் சுய விளம்பர போதையே இதற்கு சாட்சி!

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் ஏராளமான அடக்குமுறைகளை ஏவியுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் தமிழகத்தின் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்தபோது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தமது பிரச்சினைக்காக நெல்லையில் ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுக்கச் சென்றனர். அவர்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிப் படுகொலை செய்ததற்கு எதிராக இவர் எதிர்ப்பு அறிக்கைக் கூட வெளியிட்டதில்லை.

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது நடந்த லஞ்ச ஊழல் மோசடிகள், அதிகாரமுறைகேடுகள், அடக்குமுறைகள் மற்றும் கருணாநிதி ஆட்சியில் சக திரைப்பட தொழிலாளர்கள் மீது நடந்த போலீசு அடக்குமுறைகள், பட்டினியில் திரைப்படத் தொழிலாளர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது என எதற்குமே இந்த “புரட்சிக்கலைஞர்’ வாய் திறக்கவேயில்லை. வாச்சாத்தி, சின்னாம்பதி முதல் சிதம்பரம் வரை ஏழை உழைக்கும் பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதல்கள் வன்புணர்ச்சிகள் போன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகளுக்கு எதிராக சிறு துரும்புக் கூட அசைக்காதவர்தான் இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.

ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் விஜயகாந்த் காட்டும் கரிசனம் நிழல் உலகோடு (சினிமாவோடு) முடிந்து விடுகிறது. நிஜத்தில், அவர் ஒரு திடீர் பணக்காரர்; பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்துக் கொண்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குத் துதிபாடும் நவீன முதலாளி.

சென்னை மதுரை கோவை என்று பல முக்கிய நகரங்களில் ஏராளமான சொகுசு பங்களாக்கள், பலமாடி வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பண்ணை நிலங்கள், சொந்தமாக சூதாட்ட கிளப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பிறமொழி மற்றும் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பு விநியோக உரிமை நிறுவனங்கள், மச்சான், மனைவி, மகன்கள் பெயரில் ஏராளமான முதலீடுகள், கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று பணத்திலேயே புரளும் இந்த கோமான் திடீரென தமிழர்களின் மீது கரிசனம் வந்து உருண்டு புரள்வது எதற்கு?

கருணாநிதி குடும்பம், ராமதாசு குடும்பம் போல தனது குடும்பத்தையும் “”முன்னேற்றுவதற்கு”த் தான் அவர் அரசியலில் குதிக்கிறார். தமிழக மக்களிடம் தனக்குள்ள சினிமா கவர்ச்சி, செல்வாக்கு; ஓட்டுக் கட்சிகள் மீது தமிழக மக்களுக்குள்ள வெறுப்பு, தன்னைச் சுற்றியுள்ள பிழைப்புவாதிகளின் கூட்டம் – இவற்றையெல்லாம் மூலதனமாக வைத்துதான் அரசியல் வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார், அவர். இந்த வியாபாரத்தை முற்போக்காகக் காட்டத்தான் “”தமிழன்”, “”ஊழல் எதிர்ப்பு” எனச் சவடால் அடிக்கிறார்.

திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் எனச் சாடும் இந்த உத்தமர், குறைந்தபட்சம் சினிமாவில் தான் வாங்கும் சம்பளத் தொகையைப் பகிரங்கமாக அறிவிப்பாரா? அதில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா? அரசியல் நடத்தும் திராவிட ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை குறி வைத்துத் தாக்கும் இவர், தன்னுடைய நெற்றியில் திருநீறு அணிவது என்ற பெயரில் இந்துமதச் சின்னத்தை பொறித்துக் கொண்டுதான் வெளியில் வலம் வருகிறார். இந்து மதத்தையும், சாதிவெறியையும் பிரிக்க முடியாது என்பது இந்த “புரட்சிக்கலைஞருக்கு’த் தெரியாதா!

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர், தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட முடியவில்லை. “மேல்சாதி’ இந்துக்களான கள்ளர் சாதி வெறியர்களின் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து அம்பலப்படுத்திப் பேச வக்கற்ற விஜயகாந்த், “நரசிம்மா’ என்ற தன்னுடைய திரைப்படத்தில், “இந்தியாவில் முசுலீம் ஜனாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது; கிரிக்கெட் கேப்டனாக முடிகிறது; பாகிஸ்தானில் ஓர் இந்து, வார்டு பிரதிநிதியாகக் கூட வர முடியவில்லையே, ஏன்?” என்று ஆர்.எஸ்.எஸ். இன் அவதூறுகளையே வசனமாகப் பேசி, அப்பாவி முசுலீம்களிடம் தனது வீரத்தைக் காட்டுகிறார். தேசப்பற்று கொப்பளிக்கும் தன்னுடைய படங்களில் எல்லாம் முசுலீம் தீவிரவாதிகளை மட்டும் வில்லனாகக் காட்டுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு ஒத்து ஊதுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலை உலகத்தையே உலுக்கிப் போட்டதைப் பச்சைக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லும். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக அரிதாரம் பூசிக் கொண்டு வலம் வந்த விஜயகாந்த், “”அங்கே என்ன நடக்கிறதென்றே அப்போது சரியாத் தெரியவில்லை. அதனால்தான் குரல் கொடுக்கவில்லை” என்று இப்போது பத்திரிகைக்குப் பேட்டியளித்து, ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றம் சுமத்துவதில் இருந்து நழுவிக் கொள்கிறார். “”எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன? எவன் குடி கெட்டால் நமக்கென்ன?” என்று சினிமா போதையில் மிதந்து கிடக்கும் இந்தச் சுயநலப்பேர்வழி தமிழன், தமிழன் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் காவடி தூக்கும் பார்ப்பனிய விசுவாசி என்பதைத்தான் இவை நிரூபிக்கின்றன.

“”ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.க.வை மதவாதக் கட்சிங்றாங்க. தங்களை மதவாதக் கட்சின்னு அவங்க (பி.ஜே.பி) சொல்லியிருக்காங்களான்னு(!) எனக்கு தெரியாது” எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். “”உயிர் தமிழுக்கு” என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி! “”அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்(!) போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய்விட்டது” என்று அவதூறு பரப்பும் தமிழின விரோதி!

கால் நூற்றாண்டாக மதுரை அலங்காநல்லூர் சோதிடன் சுந்தரானந்தம் என்பவரின் பின்னால் திரிந்து கொண்டு நாள் நட்சத்திரம் பார்த்து திரைப்படம் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளின் மேல் உருண்டு கிடந்த இந்த “புரட்சிக்கலைஞர்’, இப்போது தமிழகத்தின் முதல்வர் பதவி நாற்காலியை மோகித்து பெங்களூர் சோதிடன் “பாபா’வின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.

“”நேற்றைய வல்லரசு! இன்றைய பேரரசு!! நாளைய தமிழரசு!!!” என்று தமிழகம் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி நாறடித்து, நினைத்த நேரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் திறந்தவெளி கழிப்பிடம் போல் தமிழகத்தை திணவோடு பயன்படுத்துகிறார். “”2006 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தே தீருவது என்ற இலக்கை நோக்கை விரைந்து கொண்டிருக்கிறார் கேப்டன்” என்று துடப்பகட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் “மாமா’ வேலையில் இறங்கிவிட்டன பார்ப்பன பத்திரிகைகள்.

சினிமாவில் இதுநாள்வரை புரட்யூசர் செலவில் “புரட்சி’ செய்து கொண்டிருந்த கருப்பு எம்.ஜி.ஆர். இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் தயவில் தமிழர்களின் தலையை மொட்டை அடிக்க நாள் குறித்து விட்டார். அதற்காக, தன் மச்சான், மனைவி மற்றும் ரசிகர்கள் பட்டாளம் என்ற கூலிப்படைகளோடு கிளம்புகிறார். மீண்டும், இன்னொரு சுனாமி வந்தால்கூட தமிழகத்தை காப்பாற்றி விடலாம். ஆனால், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இந்த சாக்கடையை தமிழகத்தில் நுழையவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது! ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும்! எனவே, இப்போதே நம் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி கறுப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் படையெடுக்கும் இந்தக் கழிசடை காவிக் கூட்டத்தை அதன் கருவிலேயே நாம் அழித்தொழிக்க வேண்டும்