Saturday, February 25, 2012

உனக்கு எதில் குறை வைத்தேன்?

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். 

Sunday, February 5, 2012

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன் 
                              முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி (ஸல்) அவர்களைப் போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே சில மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா(1) சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம்(2) என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் 'அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை(3) ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.

**

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?

ஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா 'டோட்ட‌ல் ச‌ப்மிஷ‌ன் டு அல்லாஹ்'. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான். காலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து, இர‌வு தூங்க‌ செல்லும் வரை, பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி ஒழுங்கோட‌ செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய‌ இருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனா 1400 வருஷ‌ங்க‌ளாக‌ இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளுக்கு எந்த‌ சிர‌ம‌மும் இல்லை. 

அப்ப‌டி ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுபாடுக‌ள் இஸ்லாத்தில் இருக்கு. 

ஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய், த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்னு க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை. 

அதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை. 

இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்ச‌த‌ ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே? (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா?)

ச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டமையோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலாம். 

உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷ்ப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன். 

வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌. 

அடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ. நான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :) 

அதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்ப‌து கொஞ்சம் ஓவ‌ர் தான். இருந்தாலும் ச‌மாளிப்ப‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை

என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன். 

இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌த்தில் இது ந‌ட‌ந்திருக்கு. 

ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.

வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பங்கு இருக்குங்கோவ்), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.
==========

சகோதரி நாஸியா அவர்களின் இந்த கட்டுரை அவரின் அனுமதி பெற்று இங்கே பகிரப்பட்டுள்ளது (படம்: கூகிள் உதவி). 
பதிவுலகில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரிகள் அஸ்மா, அன்னு, ஹுசைனம்மா, ஜலீலா கமால், ஆசியா உமர், ஆயிஷா அபுல், மலிக்கா, ஆமினா, ஸாதிகா, ஃபாயிஜா காதர், பாத்திமா ஜொஹ்ரா, பாத்திமா நிஹாஸா, அப்சரா, ருபீனா, enrenrum16, ஆயிஷா பேகம், Zumaras போன்றவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். 
இறைவா, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அதிகரித்து தருவாயாக...ஆமீன்.  
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஃப‌த்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
2. ஹராம் - தடுக்கப்பட்டது.
3. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது. 

வஸ்ஸலாம் - நன்றி - (எதிர்க்குரல் - திரு. அஹ்மத் )

Sunday, July 31, 2011

நோயாளியின் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
   (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நோயாளியின் தொழுகை

மூலம்: ஸஈத் இப்னு அலீ இப்னு வஹ்ஃ;ஃப் அல்க்கஃதானீ
இஸ்லாமிய அழைப்பு வழி காட்டல், வக்பு, அலுவல்கள்
அமைச்சு சவூதி அரேபியா
நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும். எனவே! நோய் என்பது அடிப்படையில் குறைபாடாகும். நோயான உடம்பு என்றால் ஆரோக்கியமற்ற, வலிமை குறைந்த உடம்பு என்று பொருளாகும். மேலும் நோயான உள்ளம் என்பது மார்க்க விஷயங்களில் அவரிடம் உள்ள குறைகளையும் சத்தியத்தை விட்டும் தூரமானதையும் குறிக்கும். நோயான உடம்பு என்பது உடல் உருப்புக்களில் ஏற்படும் சோர்வைக் குறிக்கும்.
ஒரு நோயாளியிடம் இருக்க வேண்டிய பொறுமையும் அதற்கான கூலியும்: ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோயை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொறுமையாளிகளுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள நன்மைகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்; “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.அல்குர்ஆன்  39-10
மேலும் அவன் கூறுகையில்: உங்களில் தியாகம் செய்தோரையும் பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம், உங்கள் செய்திகளையும் வெளிப்படுத்துவோம்(47:31)
இன்னும் ஒரு வசனத்தில் அவன் கூறுகையில்: ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே. நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் (21:35)
இன்னும் அவன் கூறுகின்றான்: இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்கு தவறிவிட்டதாக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் வரம்பு மீறி மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவுமே. கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்  (57:22,23)
மற்றொரு வசனத்தில் கூறுகிறான்: எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை யார் விசுவாசிக்கிறாரோ அவரின் உள்ளத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (64:11)
மேலும், ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் பொது ~நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருளும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றவர்கள். (2:155-157)
மேலும் அல்லாஹ் கூறுகையில்: (யார் பிறரால் பாதிக்கப்பட்ட பின்) பொறுமையை மேற கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (42:43)
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2:153)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~பொறுமை ஒளியாகும்என அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:223)
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுஹைப் (ரலி) அவ்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முஃமினின் விஷயம் ஆச்சரியமாக உள்ளது. அவரின் அனைத்து விஷயங்களும் நன்மையாக உள்ளது. அவ்வாறு ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் எற்படாது. அவருக்கு மகிழ்வூட்டக் கூடிய ஏதும் நிகழ்ந்தால் அதற்காக நன்றி செலுத்துவார். உடனே அது அவருக்கு நன்மையாக மாறிவிடுகிறது. மேலும் அவருக்கு ஏதும் தீங்குகள் ஏற்பட்டால் அதனை பொறுமையுடன் சகித்துக் கொள்வார். உடனே அது அவருக்கு நன்மையானதாக மாறிவிடும். (முஸ்லிம்:2999)
இன்னும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: ~அது தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால் இப்போது) அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். ஆகவே! (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளை நோய் பரவும் போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த்தியாகிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும். (புஹாரி:5734)
மேலும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்: ~ நிச்சயமாக பொறுமை என்பது முதல் கட்டத்தில் வர வேண்டிய ஒன்றாகும்.(புஹாரி:1283, முஸ்லிம்:926) மேலும் அபூ ஸஈத், அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் இருவரும் நபியவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்கள்: ~ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் களைப்பு, நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் 13 இருப்பதில்லை.(புஹாரி:5641, முஸ்லிம்:2573)
 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: ~எந்தவொரு முஸ்லிமுக்கும் நோய், மற்றும் அதல்லாத எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படாமலும், அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படாமலும் இருப்பதில்லை. (முஸ்லிம்:2572)
இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ~யாருக்கு அல்;லாஹ் ; நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான் (புஹாரி:5645)
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ~நிச்சயமாக பெரும் துன்பங்களுக்குத் தான் பெரும் கூலி உள்ளது. அல்லாஹ் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களைச் சோதிக்கிறான். யார் அதில் திருப்தி கொள்கிறாரோ அவருக்கு (இறை) திருப்தி உண்டு. யார் அதில் அதிருப்பதி கொள்கிறாரோ நோயாளியின் தொழுகை அவருக்கு (இறைவனின்) அதிருப்தியே உள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி:2396)
இன்னும் முஸ்அப் பின் ஸஃத் (ரலி) அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் அதிகம் சோதிக்கப்படுவோர் யார் என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ~நபிமார்கள், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர் (என்ற வரிசையில் சோதிக்கப்படுவர்). ஒருவர் அவரது மார்க்கப்பற்றுக்கேற்ப சோதிக்கப்படுவார். மார்க்கத்தில் உறுதியானவராக இருந்தால் அவரது சோதனையும் கடுமையாக இருக்கும். மார்க்கத்தில் உறுதி குறைந்தவராக இருந்தால் அவரது மார்க்கப்பற்றின் அளவுக்கேற்ப சோதிக்கப்படுவார். எந்தப் பாவமும் அற்றவராக நடமாடும் அளவுக்கு அடியான் சோதனைக்கு ஆளாவான் என்றுவிடையளித்தார்கள் (திர்மிதி:2398)
ஒரு முஸ்லிம் இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும்நல்லாரோக்கியத்தையும் மற்றும் தீமைகளை விட்டும் பாதுகாப்பையும் வேண்டுவார். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடத்தில் வேண்டுவதற்காக ஒருவிஷயத்தைக் கற்றுத் தாருங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: ~நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேட்பிராக! என்றார்கள். பின்பு சில நாட்கள் தங்கிவிட்டு நபியவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் கேட்பதற்கு ஒருவிஷயத்தைக் கற்றுத் தாருங்கள் என்றேன். உடனே ~அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் பெரிய தந்தையே! நீர் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஆரோக்கியத்தையே கேட்பீராக!என்றார்கள்.(திர்மிதி:3514)
மேலும் நபி (ஸல்) அவர்கள் மின்பர் மீது ஏறியவர்களாக ~நீங்கள் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், நலத்தையும் கேளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எவருக்கும் உறுதியான ஈமானுக்குப் பின் நன்மையைத் தவிர சிறந்த எதுவும் கொடுக்கப்படவில்லை எனக் நோயாளியின் தொழுகை கூறினார்கள் என அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி:3558)
இன்னும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ~இறைவனே! உனது அருள் நீங்குவதிலிருந்தும், நீ தரும் ஆரோக்கியம் தடை செய்யப்படுவதிலிருந்தும், திடீர் என நிகழும் உன் தண்டனையிலிருந்தும், உன் அனைத்துக் கோபத்திலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் (முஸ்லிம்: 2739)
மேலும், அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ~நபி (ஸல்) அவர்கள் மோசமான தீர்ப்பைவிட்டும், கடுமையான சோதனைகளைவிட்டும், பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந்தார்கள்.(முஸ்லிம்:2707)
ஆரோக்கியமாக இருக்கின்ற நிலமைகளில் நல்லமல்களை செய்வதில் முயற்சி செய்தல்.
இவ்வாறு செய்யக் கூடியவர்களுக்கு அவர்கள் சுகவீன முற்று அந்த அமல்களைச் செய்ய முடியாத நிலமைகளில் அவருக்கு அதற்கான பூரண நன்மைகள் எழுதப்படும். இதற்கு அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களின் ஹதீஸ் சான்றாக உள்ளது. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்கள். ~ஓர் அடியான் நோய் வாய்ப்பட்டால், அல்லது பிரயாணம் செய்தால் அவனுக்கு, தான் ஆரோக்கியமானவனாக, பிரயாணம் செய்யாமல் ஊரில் தங்கியிருந்த காலங்களில் செய்த அமல்களை செய்தது போன்ற நன்மைகள் எழுதப்படும். (புஹாரி:2996)
இஸ்லாமிய மார்க்கத்தின் எளிதான நடைமுறையும், இலகுவான போக்கும், பரிபூரணத்துவமும்.
அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகின்றான்: ~~இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (22:78)
மேலும், அவன் கூறுகையில்: ~~அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான் (2:185)
இன்னும் கூறும் போது: ~~உங்களால் இயன்றவரை அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்(64:16)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~நான் உங்களுக்கு சொல்லாது விட்டு விட்டவைகளில் (என்னிடம் கேள்வி கேட்காது) என்னை விட்டு விடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு முன் இருந்தவர்கள் அதிக கேள்விகள் கேட்டதாலும், தங்களது நபிமார்களுடன் வேறுபட்டதாலும் தான் அழிந்தார்கள். எனவே! நான் உங்களுக்கு ஒருவிஷயத்தை ஏவினால் அதனை நீங்கள் உங்கள் சக்திக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் எதையேனும் தடுத்ததால் அதனை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (புஹாரி:1337)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~நிச்சயமாக மார்க்கம் எளிதானதாகும் (புஹாரி:39)
ஒரு நோயாளி உளூவை முறிக்கக்கூடிய சிறு தொடக்கிலிருந்து உளூ செய்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்;. இன்னும் அவர் (குளிப்பைக் கடமையாக்கும்) பெருந் தொடக்கிலிருந்து குளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
. 2- உளூ செய்யுமுன் தன் இரு முன் பின் துவாரங்களினால் வெளியாகக் கூடிய அசுத்தங்களை தண்ணீரால் நீக்கிக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், ~நபி (ஸல்) அவர்கள் தண்ணீரால் சுத்தம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.(புஹாரி:150, முஸ்லிம்:271)
மேலும் தண்ணீருக்குப் பதிலாக கற்களையோ அல்லது அதற்குப் பகரமானதையோ உபயோகித்து சுத்தம் செய்து கொள்ளலாம்.கற்களுக்குப் பகரமாக என்பதன் கருத்து என்னவெனில், சுத்தமான, கட்டியான தடை செய்யப்படாத (கண்ணியப்படுத்தப்படாத) அனைத்துப் பொருட்களுமாகும். உதாரணமாக: பலகைத் துண்டுகாகிதம் போன்ற உறிஞ்சி எடுக்கும் அனைத்துப் பொருட்களும் கற்களைப் போன்றதாகும். இதுவே சரியான கருத்தாகும்
. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~உங்களில் ஒருவர் மலசல கூடத்திற்குச் சென்றால் அவர் தன்னுடன் மூன்று கற்களை எடுத்துச் சென்று
நோயாளி சுத்தம் செய்து கொள்ளட்டும். நிச்சமாக அது அவனுக்கு நிறைவேறிவிடும் (அபூதாவூத்:40) இவ்விஷயத்தில் மூன்று கற்கள் அல்லது அதற்குப் பகரமாக உபயோகிக்கக் கூடியதொன்று அவசியமாகும்.
ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ~மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்க